திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது. இங்கு பணிபுரியும் ஆலை தொழிலாளர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருப்பத்தூரில் போராட்டத்தில் ஈடுப்பட்ட சர்க்கரை ஆலை பணியாளர்கள்! - sugar mill workers protest
திருப்பத்தூர்: வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கிவரும் பணியாளர்கள் தங்களது 8 மாதம் சம்பளத்தைத் தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இதனைக் கண்டித்து சர்க்கரை ஆலையில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ”வாழ்வாதாரத்தினை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு சர்க்கரை ஆலை இயக்க வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள 8 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்குதல், அரசுக்கு தவறான தகவல் கொடுத்த தொழிலாளர் நல அலுவலர் தன்ராஜை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க:முறையான சாதி சான்றிதழ் வழங்கக்கோரி தொடர் போராட்டம் அறிவிப்பு!