தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் கிளைச் சிறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு! - சிறைக்காவலர்கள்

திருப்பத்தூர்: கிளைச் சிறையில் பணியாற்றும் சிறை காவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் வழங்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிறைக்காவலர்கள் மனு அளித்தனர்.

கிளை சிறை
கிளை சிறை

By

Published : Oct 20, 2020, 4:57 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கிளைச் சிறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிளைச் சிறையில், சிறைக்காவலர்கள், சிறைக் கைதிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கிளைச் சிறையில் பணியாற்றும் சிறை காவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் வழங்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிறைக்காவலர்கள் மனு அளித்தனர்.
ஆய்வின்போது காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், காவல் ஆய்வாளர்கள் திருமால், செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details