தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் - Gutkha

ஆம்பூர் அருகே ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

gutkha
gutkha

By

Published : Aug 30, 2021, 4:57 AM IST

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரபட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் வந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விடியற்காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செங்கிலிகுப்பம் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை சோதனை மேற்கொண்டனர்.

இதில் 37 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட குட்கா, ஹான்ஸ் பான்மசாலா உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை இராயபுரம் பகுதியை சேர்ந்த சித்திக் மற்றும் கரூர் ஆட்சிமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பது தெரியவந்தது.

இவர்கள் பெங்களூருவிலிருந்து வேலூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதைப் பொருள்கள் சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து போதைப் பொருள்கள் கடத்தி வந்த இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :குட்கா மொத்த வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - விக்கிரமராஜா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details