திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயிலான ஊட்டல் மலைக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, விநாயகர், சப்தக் கன்னிகள் என தனித்தனியாக அமைந்துள்ள கோயிலில் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையாகும். கரோனா காலக்கட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர்.
கோயில் மலைப் பகுதியில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான முக்கிய நகைகளையும், உண்டியல் பணத்தையும் வாரத்திற்கு ஒரு முறை கோயில் நிர்வாகத்தினர் எடுத்து அதனை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு அர்ச்சகர் மிட்டாளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோயிலை பூட்டி சென்றுள்ளார்.