தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனுக்கு கரோனா தொற்று உறுதி! - DMK Member of the Legislature

திருப்பத்தூர்: ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக உறுப்பினர்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக உறுப்பினர்

By

Published : Feb 23, 2021, 1:13 PM IST


கடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆம்பூர் பகுதியைச் சார்ந்த வில்வநாதனுக்கு இன்று (பிப். 23) காலை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

மேலும், அவரது சொந்த கிராமமான குட்டகந்தூர் பகுதியில் சுகாதார பணியாளர் கிராம மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details