தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகளை வாங்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் கூடுவதை தவிர்க்க பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஆம்பூரில் பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி பாதுகாப்புக் கவசங்கள் ஏதுமின்றி பொதுமக்கள் சந்தைகளுக்கு வந்து செல்கின்றனர்.