தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா மரணம்! - அஸ்லம் பாஷா

திருப்பத்தூர்: வாணியம்பாடி தொகுதியிலிருந்து ஆம்பூர் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரான அஸ்லம் பாஷா இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஆம்பூர் முன்னாள் எம்எல்ஏ அஸ்லம் பாஷா  aslam basha died  mmk former mla died  Manithaneya Makkal Katchi ex mla  Manithaneya Makkal Katchi former mla  அஸ்லம் பாஷா  Aslam Basha
ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா மரணம்

By

Published : Jul 21, 2020, 1:13 PM IST

வாணியம்பாடி தொகுதியிலிருந்து ஆம்பூர் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் சட்டப்பேரைவத் தேர்தலில், ஆம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பாக அஸ்லம் பாஷாவும், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் இளஞ்செழியனும் போட்டியிட்டனர். அதில், அஸ்லம் பாஷா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

கடந்த ஐந்து மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீட்டில் இருந்து வந்த நிலையில், இன்று (ஜூலை 21) அதிகாலை அவர் உயிரிழந்தார். இவருடைய நல்லடக்கம் இன்று மதியம் 2மணியளவில் நீளிக்கொல்லை பள்ளிவாசல் கபரஸ்தானில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறுதி நிகழ்வில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் பி.அப்துல் சமத் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக பணியாற்றிய அஸ்லம் பாஷாவுக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவருடைய மறைவு கட்சியினரிடமும், ஆம்பூர் தொகுதி மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details