தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sugar Mill workers strike: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் 14ஆவது நாளாகப் போராட்டம் - ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை

Sugar Mill workers strike: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 14ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்

By

Published : Dec 28, 2021, 11:10 PM IST

Sugar Mill workers strike: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டு காலமாக போதிய கரும்பு உற்பத்தி இல்லாததால் அரவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் பணியாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். திருப்பத்தூர், தர்மபுரி சர்க்கரை ஆலைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மட்டும் கடந்த 2 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்

கடந்த 10 மாதங்களாகப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , ‘ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு முதல் அரவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் பணியாளர்கள் ஆலை வாயிலில் அமர்ந்து தொடர்ந்து 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Minister Sekar Babu speech: 'போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எங்கள் கடமை மக்கள் பணி செய்வதே..!'

ABOUT THE AUTHOR

...view details