டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களைக் கண்டறியும் முனைப்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், அதில் 14 பேர் அங்கிருந்து திரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
எஞ்சியுள்ள 22 பேரில் ஆம்பூர் மருத்துவமனையில் 10 பேரும், வாணியம்பாடி மருத்துவமனையில் எட்டு பேரும், திருப்பத்தூர் மருத்துவமனையில் நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஆம்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 10 பேரில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.