தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூனைக் கறியை மான் கறி எனக் கூறி விற்றவர் கைது! - Cat Meat

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடியும், பூனைக் கறியை மான் கறி எனப் பொதுமக்களை ஏமாற்றி விற்றுவந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Animal Hunter Arrest  Thirupattur Animal Hunters Arrested'  Ambur Animal Hunters Arrested  வனவிலங்குகள் வேட்டையர்கள் கைது  ஆம்பூர் வனவிலங்கு வேட்டையர்கள் கைது  திருப்பத்தூர் வனவிலங்கு வேட்டையர்கள் கைது  மான் கறி  Deer Meat  Cat Meat  பூனைக் கறி
Deer Meat Cat Meat

By

Published : May 3, 2020, 4:13 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் வீட்டில் வளர்க்கும் பூனைக் கறியை மான் கறி எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்றுவருவதாக ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத் துறையினர் அங்கு பொதுமக்களிடம் கறி விற்றுக்கொண்டிருந்த நபரைப் பிடித்து அவரிடமிருந்த கறியை சோதனைசெய்தனர்.

அதில், பூனைக் கறியை மான் கறி எனப் பொதுமக்களை ஏமாற்றி விற்றுவந்ததும், அந்த நபர் நமாஸ் மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் மணிகண்டனைக் கைதுசெய்து அவரிடமிருந்த நான்கு கிலோ பூனைக் கறியை பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சி

இதேபோல், ஆம்பூர் அடுத்த வட வெள்ளக்கல் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிவந்த காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்த 9.5 கிலோ மான் இறைச்சியை வனத் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை வனத் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:பாலக்கோடு அருகே மான்கறி விற்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details