திருப்பத்தூர்: ஆம்பூரில் அதிமுக மாதனூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அரசு வழக்குரைஞர் டில்லிபாபு கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர், “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய, “விஷன் 2023” என்ற தொலைநோக்கு சிந்தனையை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்” என்றார்.