தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வேட்பாளர்களும், மக்களும் வாக்களித்துவருகின்றனர்.
ஆம்பூர் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் வாக்களிப்பு!
திருப்பத்தூர்: ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களது வாக்கினைப் பதிவுசெய்தனர்.
அதிமுக, திமுக வேட்பாளர்கள்
திருப்பத்தூர் ஆம்பூர் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வில்வநாதன் தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக சார்பில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளர் வே. நஜர் முகமது, ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஹசனாத் - இ - ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.