திருப்பத்தூர்:கேரளா மாநிலம், ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில் இன்று (பிப்.12) மாலை 6:10 மணியளவில் வாணியம்பாடி ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலின் முன் பக்கத்திலிருந்து 5ஆவது பெட்டியின் சக்கரத்தில் உள்ள போல்ட் கழன்று இருந்துள்ளது.
இதைக் கண்டு சூதாரித்த ரயில் பயணிகள் உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் சக்கரத்திலிருந்து கழன்று விழுந்த போல்ட்டிற்கு பதிலாக மற்றொரு போல்ட்டை மாட்டி சரி செய்தனர்.