தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ - அரசு விழாவில் நிகழ்ந்த அவமரியாதை - பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் வெளிநடப்பு!
திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் வெளிநடப்பு!

By

Published : Sep 1, 2022, 3:48 PM IST

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த தாசிரியப்பனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் 110 இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்டக்குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.

அப்போது அதிமுக வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் பள்ளிக்கு வந்து இது தன்னுடைய தொகுதி; தனக்கு தகவல் கொடுக்காமல் எவ்வாறு மாணவர்களுக்கு மிதிவண்டி கொடுக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் சமாதானப்பேச்சில் ஈடுபட்டார்.

இருப்பினும், சமாதானம் ஆகாது செந்தில்குமார் அங்கிருந்து கிளம்பினார். அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமாரின் ஆதரவாளர்களுக்கும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ - அரசு விழாவில் நிகழ்ந்த அவமரியாதை

இதன் காரணமாக அரசுப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க:சேலம் 8 வழி சாலையை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது... இணை அமைச்சர் எல். முருகன்...

ABOUT THE AUTHOR

...view details