திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குள்பட்ட வாணியம்பாடி நகரம், ஆலங்காயம் மேற்கு, கிழக்கு ஒன்றியம், உதயேந்திரம் பேரூராட்சி உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, பேசிய அமைச்சர், கூட்டணியில்லாமல் திமுக தேர்தலைச் சந்திக்குமா? என்றும் அதிமுக கூட்டணியில்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அதிமுக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்றார்.
'கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயார்'- அமைச்சர் கே.சி. வீரமணி இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நிலோபர் கபில், வாணியம்பாடி நகராட்சியில் முன்னாள் திமுக நகர மன்றத் தலைவராக இருந்த சிவாஜி கணேசன் தலைமையில் 60 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2 அலுவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுவருவதை மக்கள் உணர வேண்டும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வாணியம்பாடி நகரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை திமுகவினர் தாங்கள் அமைத்ததாக மக்களிடத்தில் பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:'திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை' - ஆட்சியர் அறிவிப்பு