திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீதர் நிலத்தில் உள்ள 60 அடி கிணறு உள்வாங்கியது.
உடனடியாக இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றின் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.