தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்கிட்டயா வரி கேட்குற... பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய இளைஞர் - petrol bunk properties

ஆன்லைனில் பணம் அனுப்ப பெட்ரோல் பங்க் மேலாளர் சேவை கட்டணம் பெற்றுக்கொண்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பெட்ரோல் பங்கில் சேவை கட்டணம்
பெட்ரோல் பங்கில் சேவை கட்டணம்

By

Published : Jun 26, 2021, 5:58 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் பாரதி. இவருக்கு அவசர பண தேவை இருந்துள்ளது. இதையடுத்து, ஆலங்காயம் -ஜமுனாமத்தூர் செல்லும் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வரும் நவீன்குமாரிடம் கேட்டுள்ளார்.

ஆன்லைனில் பணம் அனுப்பிய மேலாளர்

நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு சென்ற பாரதி, போன்பே மூலமாக நவீன்குமாருக்கு ரூபாய் 500 அனுப்பிவிட்டு, கையில் 500 ரூபாய் பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும், பெட்ரோல் பங்கிற்கு தன் நண்பர் அருணுடன் வந்த பாரதி, போன்பே மூலம் மேலும் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

சேவை கட்டணம்

பாரதிக்கு பதிலளித்த அருண்,’ஏற்கனவே என்னிடமிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டேன். பெட்ரோல் பங்க் கணக்கில் இருந்து பணம் தர வேண்டுமெனில் சேவை கட்டணமாக 10 ரூபாய் வசூலிப்பார்கள்’எனக் கூறியுள்ளார்.

இதை ஒப்புக்கொண்டு பணத்தைப் பெற்றுச் சென்ற பாரதி, சிறிது நேரத்தில் திரும்ப வந்து,’என்னிடமே சேவை வரி கேட்கிறாயா?’என ஆத்திரத்தில் பெட்ரோல் பங்க்கில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

சிசிடிவி

ரகளையில் ஈடுபட்ட இளைஞர்

அத்துடன், பங்க்கில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருள்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். மேலாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கையில் கத்தியுடன் பாரதி பெட்ரோல் பங்க் முழுவதும் வலம் வந்ததால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் நவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய பாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..

ABOUT THE AUTHOR

...view details