திருப்பத்தூர்:வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு, தனது ஏழு வயது குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம்.
இந்நிலையில் நேற்று(அக்.25) அக்குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மஜக பிரமுகரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பது உங்கள் குடும்பத்தினருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.