திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுல்தான் மியான் தெருவில் உள்ள 24,25,27 ஆகிய வார்டுகளில் அப்பகுதியைச் சேர்ந்த ஷா முகமது (44), பாரூக் (47), தாஜ் (37), அப்பு(30) ஆகியோர் மாட்டு இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இறைச்சியில் இருந்து வரும் கழிவுகள் அருகே உள்ள கால்வாயில் கலப்பது மட்டுமின்றி, மாட்டின் தோலினை மிக நீண்ட நாட்களாகப் பதப்படுத்தி வைத்துள்ளதாகவும் அதிலிருந்து வெளியேறும் நுண்ணுயிர்கள் மூலம் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகக் கூறி நகராட்சி ஆணையர், அதிகாரிகளிடம் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.