திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆகாஷ், அஜித். இவர்கள் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் ரூ.500 கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த பிப்.4-ம் தேதி அன்று ஆகாஷ் மற்றும் அஜித் அவருடைய நண்பர்கள் ஐந்து பேர் ஆகியோர் கஞ்சா போதையில் அருண் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அருண் குமார், அவர் மனைவி காவியா மற்றும் தங்கை ஐஸ்வர்யா ஆகிய 3 பேரையும் வெட்டியுள்ளனர். பின்னர் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.