திருப்பத்தூர்:திமுகவின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுகூட்டம் வாணியம்பாடியில்நகர செயலாளர் சாரதிகுமார் தலைமையில் நேற்று (மே 14) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் உரையாற்றினார். அப்போது மழை பெய்தது. இருப்பினும் சந்திரசேகர் குடை பிடித்தப்படி உரையாற்றினார்.
அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் விட்டது. திமுகவை பற்றி குறை கூறிய கமல், சீமான் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து டெல்லியே அதிர்கிறது. இந்தியாவில் அதிக இடங்களில் அண்ணா அறிவாலயம் உள்ளது. விரைவில் டெல்லியே அதிரும்படி ஆட்சியை நடத்துவார்.