திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் கொல்லப்புரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இவர் இன்று (13.08.20) காலை வழக்கம் போல் தனது இரவுப் பணியை முடித்துவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த வெங்கிளி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மிதிவண்டியில் மோதியதால், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.