திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலைப் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள்(27). இவரது கணவர் தங்கராஜ் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்று காலை அவரது வீட்டின் அருகே காளியம்மாள், பாட்டி நீலா சமையல் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் டிராக்டரில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அவ்வழியாக வந்துள்ளார். திடீரென சுரேந்தரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் காளியம்மாள், நீலா மீது மோதியது. இந்த விபத்தில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த நீலாவை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.