தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன்: தேடுதல் வேட்டையில் தீயணைப்புத் துறை! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தந்தை கண் முன்னே குட்டை நீரில் மூழ்கி மாயமான மாற்றுத்திறனாளி மகனை தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர்.

A young man drowned in a puddle
திருப்பத்தூர் இளைஞர் உயிரிழப்பு

By

Published : Sep 7, 2020, 10:56 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ்ச்செல்வன். இவரது பாட்டி இறந்துவிடவே ஆலங்காயம் சாலையிலுள்ள ஊசி தோப்பு பகுதியில் கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காகச் சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழைநீரில் குளிப்பதற்காக மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது, ஆழமான பகுதியில் சிக்கி தமிழ்ச்செல்வன் சத்தமிடவே அவரது தந்தை அவசர அவசரமாக உதவ முயலும் முன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கினார்.

பதறிப்போன ராஜா உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வனைத் தேடிவருகின்றனர்.

தந்தை கண் முன்னே மாற்றுத்திறனாளி மகன் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details