தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்.. - திருப்பத்தூர் செய்திகள்

tirupattur instagram reels issue: திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே கணவனுக்குத் தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை வீட்டுக்கு வரவழைத்த பெண், அதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார்.

tirupattur instagram reels issue
கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த மனைவி.. வீட்டுக்கு வரவழைத்த வாலிபரால் நடந்த விபரீதம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 2:27 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நதியா பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பிரகதீஸ்வரன், தனது சொந்த வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து நதியா தனது கணவனுக்குத் தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பிரகதீஸ்வரனை வரவழைத்து உள்ளார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ்வரன் நதியாவை பார்த்து கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு நதியா தன்னுடைய தாலி செயின் மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.

அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நதியாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் பிரகதீஸ்வரன். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து நதியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று (அக் 31) பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தாலி செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்போது முடக்கியுள்ளார் நதியா. இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது? உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details