தனியார் கல்லூரியில் பணி செய்த வெல்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - Welder killed by electric shock
திருப்பத்தூர்: தனியார் கல்லூரியில் பணி செய்யவந்த வெல்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![தனியார் கல்லூரியில் பணி செய்த வெல்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு தனியார் கல்லூரியில் பணி செய்யவந்த வெல்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:50:22:1623504022-tn-tpt-02-electric-shock-man-dead-vis-scr-pic-tn10018-12062021182615-1206f-1623502575-427.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் முத்து (35) வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் நந்தினி (9), மோனிஷா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை வேய்வதற்கு முத்துவை அழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் தனியார் கல்லூரி இரண்டாவது மாடியில் பணி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுமுகுறித்து கல்லூரியின் ஆசிரியர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்துவின் உடலைமீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.