தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக தம்பியை கல்லால் தாக்கும் அண்ணன் - பரபரப்பு வீடியோ - viral video

வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பி மண்டையை கல்லால் அண்ணன் உடைத்ததால், பலத்த காயங்களுடன் தம்பி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தம்பியை அண்ணன் கல்லால் அடிக்கும் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

தம்பியை கல்லால் தாக்கும் அண்ணன்
தம்பியை கல்லால் தாக்கும் அண்ணன்

By

Published : Feb 28, 2023, 2:35 PM IST

Updated : Feb 28, 2023, 3:55 PM IST

முன்விரோதம் காரணமாக தம்பியை கல்லால் தாக்கும் அண்ணன்

திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த புருஷோத்தகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (39) மற்றும் சரவணன் (34) இருவரும் அண்ணன் தம்பி உறவினர்கள் ஆவார். இவர்களது தந்தையான சின்னதம்பி என்பவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் செங்கல் சூளையும் உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான செங்கல் சூளை பொருட்களை சிவகுமார் கொண்டு சென்றதாகக் கூறி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சண்டையும் ஒரு கட்டத்திற்கு மேல் வாய் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவக்குமார் அவரது தம்பி சரவணனை கல்லால் தாக்கியுள்ளார், அது மட்டுமின்றி தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இந்நிகழ்வு குறித்து சரவணன் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவக்குமார் சரவணனை கல்லால் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பில்லி, சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Last Updated : Feb 28, 2023, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details