வாணியம்பாடியில் அரசு மதுபானகடையில் டாஸ்மாக் ஊழியர் குவாட்டருக்கு 10 ரூபாய் அதிகம் கேட்டதாக பரவும் வீடியோ திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. வாணியம்பாடி நகரப் பகுதியில் இரண்டு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் இந்த மதுக் கடையை நாடி நகரப் பகுதியில் இருக்கக்கூடிய குடிமகன்கள் சென்று வருகின்றனர்.
இந்த கடைக்கு அதிக அளவில் மாலை நேரத்தில் குடிமகன்கள் செல்கின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் என வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது, குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கட்டாயம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஒருவர் தனது ஆதங்கத்தை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அதில் பணியாற்றக்கூடிய ரவி என்பவர் கூடுதலாகப் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தர மறுத்த அந்த குடிமகன், அவருடன் இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அரசு டாஸ்மாக் கடையில் அதிக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருந்த நிலையில், இந்த டாஸ்மாக்கில் நீண்ட காலங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வெளியான வீடியோவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"கைய பாத்துக்கோங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியலை" போலீஸ் தேடும் பதட்டத்துடன் ரவுடி வெளியிட்ட வீடியோ