தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் : எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - திருப்பத்தூர் சிபிஐ ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

tn-vlr-03-cpi-party-protest-vis-scr-tn10018
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 20, 2020, 10:29 PM IST

Updated : Feb 21, 2020, 7:46 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதனை நகர செயலாளர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சுந்தரேசன் தலைமையேற்று நடத்தினார்.

மாநிலம் தழுவிய சிபிஐ ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், கேரள மாநிலத்தை போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட விவசாய சங்க தலைவர் ஆர்.முல்லை, மாவட்ட செயலாளர் ஏ.சி சாமிக்கண்ணு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'வழக்குகளுக்கு அஞ்சி சிஏஏவை அதிமுக ஆதரிக்கிறது' - கே.ஆர். ராமசாமி

Last Updated : Feb 21, 2020, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details