திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கினார்.
ஆனால் சுகாதார நிலையம் அமைக்க அப்பகுதியில் அரசு நிலம் இல்லாததால் இடம் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் துணை சுகாதார நிலையம் அமைக்க அதே கிராமத்தை சேர்ந்த அண்ணபூரணி ராஜ்குமார் குடும்பத்தார் தங்களுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக அரசுக்கு தானமாக வழங்குவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோரிடம் தெரிவித்தனர்.