திருப்பத்தூர்:வாணியம்பாடி புதூர் ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
ரயிலில் இருந்து விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு - Jolarpet Railway Police
வாணியம்பாடியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தவர் உயிரிழந்தார்.
ரயிலில் இருந்து நிலை தடுமாறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு!
இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட தகவலில், அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குமார் தமாங் என்பதும் இவர் கடந்த 02.11.2022 அன்று மேற்கு வங்கத்திலிருந்து எர்ணாகுளம் முதல் கன்னியாகுமரி விரைவு ரயிலில் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் சிக்கியது எப்படி?