திருப்பத்தூர்: தங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் நந்தகுமார்(33). இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜூமோட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பட்டியல் இனத்தவர்களை ஆபாசமாகப் பேசியும் தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போலக் கருத்துக்களைக் கூறியும் வாட்ஸ் அப்பில் பரவ செய்துள்ளார்.
அதேபோல், பத்திரிகை நிறுவனங்களையும் செய்தியாளர்களைப் பற்றியும் சில தினங்களுக்கு முன்பு ஆபாசமாகப் பேசி சமூக வலைத்தளங்கள் பரவச் செய்துள்ளார். இதனை அறிந்த பட்டியல் இனத்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன.27) அவருடைய வீட்டிற்குச் சென்று அவர்களும் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.