திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கம்போல் இன்று (மே 4) தனது சைக்கிளில் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சின்ன கொம்மேஸ்வரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.