திருப்பத்தூர்: வாணியம்பாடி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவர், ஆட்டு தோல் வியாபாரம் செய்துவருகிறார். இவரது தொழிற்சாலையில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆட்டு தோல்கள் திருடுபோவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்மாயில் தொழிற்சாலையிலுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் தொழிற்சாலைக்குள் நுழைந்து, தோல்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
தோல் திருடியவர் கைது
இதனைத் தொடர்ந்து கன்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இஸ்மாயில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஆட்டு தோல் திருடியது வாணியம்பாடி அண்ணா நகரைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:காவலரை கடத்திய கும்பல் - கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு