வேலூர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற குடியாத்தம் காவல்துறையினர், லாரிக்கு அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை மீட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.