ஆம்பூர்:சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், நிலேஷ் பாபு. பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் மேலளாராகப் பணியாற்றி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான முகாமில் கலந்துகொள்வதற்காக மனைவி அபூர்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.
ஆம்பூர் அருகே மாதனூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. முன் இருக்கையில் இருந்த ஓட்டுநர் ஹரிஷ், வங்கி மேலாளர் நிலேஷ் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்து மயங்கினர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபூர்வா லேசான காயம் அடைந்தார்.