தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் ரூ.99,600 பறிமுதல்! - Election Level Monitoring Committee

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த ரூ.99,600-ஐ தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடியில்  தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் 99ஆயிரத்து,600 ரூபாய் பறிமுதல் செய்தனர்
வாணியம்பாடியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் 99ஆயிரத்து,600 ரூபாய் பறிமுதல் செய்தனர்

By

Published : Apr 1, 2021, 10:25 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வாணியம்பாடியில் ரூ.99,600 பறிமுதல்

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தூர் ராமகுப்பத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரிடம் சோதனை நடத்தினார்கள்.

இதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.99,600 பறிமுதல் செய்த நிலை கண்காணிப்புக் குழுவினர், அந்தப் பணத்தை ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: 'திருப்பத்தூர் டிஎஸ்பி தற்காலிக பணியிடை நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்'

ABOUT THE AUTHOR

...view details