திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பார்சனப்பள்ளி குப்புராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சூர்யா(13), இவர் கரும்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சூர்யா கடந்த சில தினங்களாக சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சூர்யாவின் பெற்றோர் அவரை பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா நேற்று(நவ.10) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.