திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரோந்து பணியில் அம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி, திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல் துறையினர் கொற்றிப்பள்ளம், வெங்கடராஜா பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர்.
சாராயம் கடத்திய 8 பேர் கைது அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்திச் சென்று விற்பவர்கள், இடைத்தரகர்கள் என 8 பேரை காவல் துரையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பட்டை உள்ளிட்ட மூலப்பொருள்கள், 200 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'மிஸ் யூ ஜானு... மகள் குறித்து உருகிய ஸ்ரீதேவி' - த்ரோ பேக் ட்வீட்