தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்புகள்

திருப்பத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) பெய்த மழையினால் பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் 8 அடி நீளம் நாகப்பாம்பு
குடியிருப்பு பகுதிகளில் 8 அடி நீளம் நாகப்பாம்பு

By

Published : May 2, 2021, 1:40 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்துவருபவர் பார்த்தசாரதி. இவருக்குச் சொந்தமான வீட்டில் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோல் அதே குடியிருப்பில் வசித்துவரும் திருக்குமரன் என்பவரின் வீட்டிலும் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு பதுங்கி இருந்ததுள்ளது.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்புத் துறை அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பாம்பைப் பிடித்து வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details