தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75th Independence Day: கொடி ஏற்றி வைத்த திருப்பத்தூர் ஆட்சியர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

thirupattur news  thirupattur latest news  independence day celebration in thirupattur  75th independence day  75th independence day celebration  ndependence day  national flag  collector hoisting national flag  thirupattur collector  திருப்பத்தூர் செய்திகள்  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்  கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்  தேசியக் கொடி  நலத்திட்ட உதவிகள்  75 ஆவது சுதந்திர தினம்  சுதந்திர தினம்  சுதந்திர தன விழா  சான்றிதழ் வழங்குதல்
கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்

By

Published : Aug 15, 2021, 10:26 PM IST

திருப்பத்தூர்: நாடு முழுவதும் இன்று (ஆக 15) 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர்.

சான்றிதழ் வழங்குதல்

நலத்திட்ட உதவிகள்

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த 335 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

98 பயனாளிகளுக்கு 1,19,56,827 ரூபாய் மதிப்பில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

ABOUT THE AUTHOR

...view details