திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனைச்சாவடியில் இன்று (மார்ச் 18) அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து பருகூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கிரானைட் கல் வியாபாரி ஹரி சங்கர் என்பவரது காரில் உரிய ஆவணமில்லாமல் 70 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்பிடிக்கப்பட்டது.