தமிழ்நாடு-ஆந்திர எல்லை வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட மதுவிலக்கு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில், வன அலுவலர் மதுசூதன் தலைமையில் 16க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் 5,800 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு! - எரிசாராயம் பறிமுதல்
திருப்பத்தூர்: ஆந்திர எல்லைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,800 லிட்டர் எரிசாராயத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு
அப்போது, வனப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எரிச்சாராய உற்பத்தி ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த திருப்பத்தூர் காவல் துறையினர் கைப்பற்றி அழித்தனர். மேலும், நான்கு இடங்களில் இருந்த 5,800 லிட்டர் எரிசாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர்.
இதையும் படிங்க:திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பு பணியில் சீமான்