தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் 5000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூர்: கொர்ரிபள்ளம் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட 5000 லிட்டர் சாராய ஊறலைத் தனிப்படை காவல் துறையினர் அழித்தனர்.

சாராய ஊறல் அழிப்பு
சாராய ஊறல் அழிப்பு

By

Published : Jun 29, 2021, 9:36 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிக அளவு நடைபெற்றுவருகின்றன. இதனைத் தடுக்க தனிப்படை காவல் துறையினர் அமைத்து பல்வேறு பகுதிகளில் தொடர் ரோந்துப்பணி நடைபெற்றது.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் உள்ள கொர்ரிபள்ளம் மலைப்பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ஏழு பேர் நேற்று (ஜூன் 28) சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த, ஐந்து சாராய அடுப்புகள், பேரல்களில் நிரப்பி மண்ணில் புதைத்துவைத்திருந்த 5000 லிட்டர் சாராய ஊறல், 600 லிட்டர் கள்ளச்சாராயம், நான்கு டன் விறகுக் கட்டைகள், 100 கிலோ கடுக்காய் மூட்டைகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் தீயிட்டு அழித்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய சாராய கும்பலைச் சேர்ந்த நடராஜன், பெருமாள், சின்னதம்பி உள்ளிட்ட ஆறு பேரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details