திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சி.வி.பட்டறை சுப்ராயன் கோயில் பகுதியில் அருண் என்பவர், அங்குள்ள பாலாற்றுப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
தண்ணீர்த் தொட்டிக்குள் பதுக்கிவைத்திருந்த 500 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்! - திருப்பத்தூரில் கள்ளச்சாராயம்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தண்ணீர்த் தொட்டிக்குள் பதுக்கி வைத்திருந்த 500 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ள சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
அப்போது காவல் துறையிரைக் கண்ட அருண், அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார். பின்னர் அருணின் வீட்டை சோதனையிட்டதில், தண்ணீர்த் தொட்டியில் ஐந்து மூட்டைகளில் பதுக்கிவைத்திருந்த சுமார் 500 சாராய பாக்கெட்டுகள் சிக்கின. அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று கொட்டி அழித்தனர். தலைமறைவான அருணை காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:தொடர் கள்ளச் சாராய கடத்தல்கள்; 810 லிட்டர் பிடிபட்டது!