தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு! - Tirupattur Rural Police

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

By

Published : Nov 22, 2022, 10:48 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த சின்ன பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாதேசிங்கு என்பவருக்கு நான்கு வருடங்கள் முன்பு பூர்ணிமா (25), என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்துள்ளார்.

இன்று வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில், மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நீண்ட நேரமாக பூர்ணிமா வெளியே வராததை அறிந்த வீட்டின் உறவினர்கள் மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது சடலமாக இருந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாட்டுக்கொட்டகை சுத்தம் செய்யும்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலியைக் கொளுத்தி, தன் மீது தீ வைத்துக்கொண்ட நபர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details