திருப்பத்தூர்:சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 188 நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்பொருட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா ஜோலார்பேட்டை அருகே இடையாம்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.