தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - tamil news

திருப்பத்தூர்: வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளிமாநிலத்துக்கு கடத்தப்படவிருந்த 400 கிலோ அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

அரிசி பறிமுதல்
அரிசி பறிமுதல்

By

Published : Feb 17, 2020, 4:04 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இன்று காலை பிருந்தாவன் ரயிலில் ரேஷன் அரிசி கடத்துவதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் ரயில் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரயிலில் கடத்தப்படவிருந்த 400 கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அலுவலர்கள், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details