உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியிலிருந்து ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதிக்கு உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அரசின் 144 தடை உத்தரவை மீறி, எந்தவித அச்சமும் இல்லாமல் மினிவேன் முலம் சென்ற 40 பேரை ஆம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிராமிய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.