தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் 4 போலி மருத்துவர்கள் கைது - மாவட்ட காவல் துறை

திருப்பத்தூரில் 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூரில் 4போலி மருத்துவர்கள் கைது
திருப்பத்தூரில் 4போலி மருத்துவர்கள் கைது

By

Published : Oct 15, 2022, 10:47 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகளவில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட போலீசார் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில் திருப்பத்தூரை அடுத்த ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்த உமாசரஸ்வதி மற்றும் செண்ணாம்மாள் ஆகிய 4 பேரும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடந் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவி சத்யா கொலை வழக்கு - ரயிலில் பெண்கள் பாதுகாப்பு நிலையை ஆய்வுசெய்த ஏடிஜிபி வனிதா

ABOUT THE AUTHOR

...view details